
கராத்தே சந்திரனாக மாறும் பஹத் பாசில்
சில வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் திரையுலகில் தொடர் சரிவை சந்தித்து வந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் மகேஷிண்டே பிரதிகாரம். இந்த படத்தின் இயக்குனர் திலீஷ் போத்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் சமீபத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் "பிரேமலு" படத்தை தயாரித்த பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக டைட்டில் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!