சிவகார்த்திகேயன் 21வது படத்தின் தலைப்பு இதுவா?
பிப் 13, 2024
Advertisement
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி இந்த படத்தின் தலைப்பை டீசர் வீடியோவின் மூலம் வெளியிடுவதாக நேற்று ஒரு வீடியோ மூலம் அறிவித்தனர். அந்த வீடியோவில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்திய விதம், உடற்பயிற்சி செய்த விஷயங்களை வீடியோவாக வெளியிட்டனர். இந்த படத்தின் தலைப்பு குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்திற்கு "சோல்ஜர்" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!