
விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்?
இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஒரு கேரக்டரில் காண்பிக்க விஜய்யும், வெங்கட் பிரபுவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதாவது ஏஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தின் கேரக்டரை இந்த படத்தில் நடிக்க வைக்க போகிறார்களாம். இது குறித்து அவரது குடும்பத்தாரிடமும் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அனுமதி கேட்டபோது, விஜயகாந்த்தை இந்த படத்தில் எந்தமாதிரி ரோலில் காட்டப்போகிறீர்கள் என்பதை கேட்டறிந்த பிரேமலதா விஜயகாந்த், அவர் தோன்றும் காட்சிகளை இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு எங்களிடத்தில் காட்டி நாங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகே அதை படத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!