தம்பியையும் ஹீரோவாக களத்தில் இறக்கிய விஷ்ணு விஷால்
Advertisement
Advertisement
தம்பியையும் ஹீரோவாக களத்தில் இறக்கிய விஷ்ணு விஷால்
பிப் 12, 2024
அ நிறம் | அளவு
Advertisement
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பிறகு இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, எப்ஐஆர், லால் சலாம் என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாது தனது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது தம்பி ருத்ரா என்பவரையும் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்தபடத்திற்கு ‛ஓஹோ எந்தன் பேபி" என பெயரிட்டுள்ளனர். காதல் கதையில் உருவாகும் இதில் நாயகியாக மிதிலா பால்கர் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கிருஷ்ண குமார் ரமா குமார் என்பவர் இயக்க, தர்புகா சிவா இசையமைக்கிறார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். படத்தின் பூஜையும் சென்னையில் விமரிசையாக நடந்தது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!