
லவ்வர், லால் சலாம் படத்தில் மேட் பட கதாநாயகிகள்
ஸ்ரீ கவுரிப்ரியா "மேட்" படம் தவிர கடந்த வருடம் வெளியான ஓடிடி வெப் சீரிஸ் ஆன "மாடர்ன் லவ் சென்னை"யில் நடித்துள்ளார். "லவ்வர்" படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் தனக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
அனந்திகா சனில் குமார் கடந்த வருடம் வெளியான "ரெய்டு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன்பாக 2022ல் வெளிவந்த "ராஜமுந்திரி ரோஸ்மில்க்" படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். அதன்பின் "மேட்" படத்திலும் நடித்தார். இப்போது "லால் சலாம்" படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்துள்ளார்.
"மேட்" படத்தில் ஒன்றாக நடித்த கவுரிப்ரியா, அனந்திகா நாளை தமிழில் எதிரும் புதிருமாக போட்டியை சந்திக்க உள்ளார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!