
மீண்டும் வருகிறார் சமந்தா: ரசிகர்கள் மகிழ்ச்சி
தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் "சிட்டாடல்" என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருகாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!