
நான் கதாநாயகன் அல்ல, கதை நாயகன் : அப்புகுட்டி
பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள படம் "வாழ்க விவசாயி". இந்த படத்தில் விவசாயியாக அப்புகுட்டி நடித்துள்ளார். இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.
இது குறித்து அப்புகுட்டி கூறியதாவது : நான் எப்போதும் கதை நாயகன் தான், கதாநாயகன் அல்ல. எனக்கு பொருத்தமான கதைகளோடு இயக்குனர்கள் வருகிறார்கள். எனக்கு பொருந்தாத கேரக்டர்களாக இருந்தால் நானே மறுத்து விடுகிறேன். கதை நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!