
விஜய்யின் 69வது படத்தை இயக்கப் போவது யார்?
அந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச்.வினோத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் அவரிடத்தில் கதை சொல்லி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அட்லியும் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே எச்.வினோத் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த மூன்று பேர்களில் எச்.வினோத் கூறிய அரசியல் கதையிலேயே விஜய் அடுத்த படியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!