
புதுமுகங்களின் அதோ முகம்
சுனில் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “அதோ முகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை சொல்லும் படம். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ், திரில்லராக படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!