
என்னை மன்னித்து விடுங்கள் அப்பா : கணவரை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கண்ணீர்
ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா - முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகார்கள் எல்லாம் பதிவாகின. "பிரியா என் மகளே அல்ல" என ராஜ்கிரண் கூறினார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பிரியா - முனீஸ்ராஜா பிரிந்துவிட்டனர்.
இதுதொடர்பாக பிரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‛‛2022ல் நானும், முனீஸ்ராஜாவும் திருமணம் செய்தோம். இப்போது நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை வளர்த்த அப்பாவை(ராஜ்கிரண்) ரொம்ப காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு பிரச்னை வந்தபோது என்னை காப்பாற்றியது அவர் தான். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா"" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!