
வெங்கட் பிரபு - சுதீப் படம் கைவிடப்பட்டதா?
அப்போது மாநாடு படம் கிட்டத்தட்ட முடிவடைந்து இருந்த நிலையில் அதன் பிறகு அவர் சுதீப் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை இயக்குவதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. அதை முடித்துவிட்டு இதோ இப்போது விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுதீப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கிட்டத்தட்ட அந்த படம் வெறும் செய்தி அளவிலேயே கைவிடப்பட்டதாகவும் கன்னட திரையுலகில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது உண்மை என்பது போன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கிச்சா சுதீப் கலந்துரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீங்கள் நடிக்க இருந்த படம் என்ன ஆனது? என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், வெங்கட் பிரபுவை காணவில்லை என்று பதில் கொடுத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் சுதீப் கொடுத்த இந்த பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!