
மீண்டும் படம் இயக்கும் ஸ்டன்ட் சில்வா
அஜித் நடிப்பில் வெளிவந்த "மங்காத்தா" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு "என்னை அறிந்தால்" படத்திற்கு சண்டை அமைத்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். 2022ம் ஆண்டு "சித்திரை செவ்வானம்" என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா நடித்திருந்தார்கள். சண்டை இயக்குனர் இயக்கிய படம் என்றாலும் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன படம்.
இந்த நிலையில் தான் அடுத்து இயக்கப்போகும் படம் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார். இது ஹாலிவுட் பாணியிலான அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார் சில்வா. விஜய், அஜித் இருவரிடமும் கதையை சொல்லிவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். ஒரு வேளை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த கதையை அருண் விஜய்யை வைத்து இயக்குவார் என்று தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!