
விடாமுயற்சி அப்டேட்ஸ் : அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
தற்போது "விடாமுயற்சி" படம் பற்றிய அப்டேட் ஒன்றை அஜித்தின் பிஆர்ஓவும், படத்தின் பிஆர்ஓவுமான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். “அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதிய இடத்தில்... இன்னும் சில நாட்களில்…,” என அஜித்தின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், இரண்டு புகைப்படங்களையும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். ஒரே சமயத்தில் இத்தனை அஜித் புகைப்படங்கள் வந்தது, படத்தின் அப்டேட் கிடைத்தது என அஜித் ரசிகர்கள் "ஹேப்பி" ஆக உள்ளார்கள்.
பொதுவாக அஜித் படங்களுக்கு இப்படியான ஒரு அப்டேட் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், "விடாமுயற்சி" படத்திற்கு இப்படி அடுத்தடுத்து புகைப்படங்களுடன் கூடிய அப்டேட் கிடைத்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!