
‛சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல : ரஜினி
அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ‛‛அப்பாவை சங்கி என்று அழைப்பது கஷ்டமாக உள்ளது. அவர் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார்"" என்றார். இது சமூகவலைதளத்தில் வைரலாகி பேசு பொருளானது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல. அந்த அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதத்தையும் விரும்புகிறவர் என்பது அவரது கருத்து. லால் சலாம் படத்தை விளம்பரம் செய்ய சங்கி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ‛லால் சலாம்" படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசி உள்ளார். படம் நன்றாக வந்துள்ளது"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!