
கர்ப்ப காலத்திற்கு ஏற்ற யோகாசனத்தை கடைபிடிக்கும் அமலாபால்
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அமலாபால் தொடர்ச்சியாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமான, யோகாசனத்தில் ஒரு பிரிவான மலாசனா என்கிற யோகாசனத்தை தொடர்ந்து செய்து வருகிறார் அமலாபால்.
இதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமலாபால், ‛‛இந்த ஆசனம் இடுப்பு பகுதியை பலமாக வைத்திருக்க உதவுகிறது என்றும், அதே சமயம் இந்த ஆசனத்தை செய்ய விரும்புபவர்கள் தங்களது மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு செய்வது நல்லது"" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!