
காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்
“ஆக, இவர்தான் அவர்… எனது சிறந்த நண்பர், நாங்கள் சிரிப்போம், சண்டை போடுவோம், அழுவோம். தவறான வரிகளை நம்பிக்கையுடன் அவர் சத்தமாகப் பாடுவார். எங்களுக்குள் ஏ முதல் இசட் வரை வேறுபாடு உண்டு, ஆனாலும் அவர் என்னை நிறைவு செய்வார். நாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றாலும் எனக்குள் எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும், எளிமையாகவும் இருப்பார். அவருடன் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும், அதே சமயம் அமைதியாக அமர்ந்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து எனது வலிகளைப் பற்றிப் பேசுவேன். இந்த வாழ்க்கையை கோடி மடங்கு ஆனந்தமாகக் கடக்க இவர் மட்டும் போதும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!