
சோலோ ஹீரோயினாக நடிக்கும் மிர்னா
இந்த படத்தை விக்ரமன் ஸ்ரீதரன் தனது நண்பர் ஸ்ரீராம் சிவராமனுடன் இணைந்து தயாரித்து, இயக்குகிறார். மிர்னாவுடன் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி உள்பட பலர் நடிக்கிறார்கள். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியதாவது : ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர். என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். ஜெனிக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதுவரை பார்க்காத மிர்னாவை நிச்சயம் "பெர்த் மார்க்" படத்தில் பார்க்கலாம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!