
புனே திரைப்பட விழாவில் இடிமுழக்கம்
சீனுராமசாமி கூறும்போது, “இடிமுழக்கம் படம் பழிவாங்கும் உணர்ச்சியை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படம் திரைக்கு வரும் முன்பே புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்து திரையிட்டு பார்வையாளர்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட அனுப்பி வைக்க இருப்பதாக புனே சர்வதேச திரைப்பட விழாக்குழு அறிவித்து இருக்கிறது"" என்றார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்னன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அசோக்குமர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!