
தெலுங்குப் படங்கள் 200 கோடி கடக்க : தமிழ்ப் படங்கள் 100 கோடிக்கு தடுமாற்றம்
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மகேஷ் பாபு நடித்த "குண்டூர் காரம்" படம் 230 கோடி வசூலையும், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த "ஹனுமான்" படம் 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. தெலுங்கில் வெளியான 4 படங்களில் 2 படங்கள் 200 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதே சமயம் தமிழில் வெளியான 4 படங்களில் 2 படங்களான "அயலான், கேப்டன் மில்லர்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 75 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் 100 கோடி வசூலைக் கடக்க தடுமாறி வருகின்றன. 2024ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படங்களின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற வருத்தத்தில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.
அடுத்து வரும் சில பெரிய படங்களாவது எதிர்பார்ப்பை மீறி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!