
உண்மை கதையில் மேகனா எலென்
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கந்தசாமி கூறியதாவது: திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும், ஊருக்கும் நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படம் வெளிவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!