முழுக்க முழுக்க ஷெட்டில் படமாகும் சிம்பு படம்
ஜன 20, 2024
Advertisement
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படம் தொடங்குவதற்கு தாமதமாகி வந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாககூட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிகிறது.
வரலாற்று படமான இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான "300 வீரர்கள்" படத்தின் படம் பாணியில் முழுக்க முழுக்க அரங்கம் அமைத்து விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகிறதாம். இதற்கான செட்டுகள் சென்னை புறநகரில் அமைக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் அலுவலகத்தில் கிராபிக்ஸ் வல்லுநர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். துபாயில் இருக்கும் சிம்பு படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சியில் இருக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படம் தயாராகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!