
50வது நாளில் பார்க்கிங்
டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக இந்தப் படத்தின் வசூல் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. இல்லையென்றால் அதிகமான வசூலைப் பெற்ற சிறிய படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும். இருப்பினும் அதைக் கடந்து ஓடி நேற்று 50வது நாளை இப்படம் தொட்டிருக்கிறது. வசூல் ரீதியாக லாபகரமான படமாக அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
படம் 50 நாளைத் தொட்ட மகிழ்ச்சியில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, “முதல் நாளிலிருந்தே "பார்க்கிங்" படத்தை நான் உறுதியாக நம்பினேன். இந்த அற்புதமான வெற்றியின் மூலம் நீங்கள் அனைவரும் என்னை மேலும் நம்ப வைத்துள்ளீர்கள். இந்த வெற்றி உங்கள் அனைவராலும்தான், அனைவருக்கும் நன்றி. எனது குழுவை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று, வசூலையும் பெற்ற சில படங்களின் வரிசையில் கடைசியாக சேர்ந்த படம் "பார்க்கிங்". கடந்த வருடத்தில் வெளியாகி இந்த வருடத்தில் 50வது நாளைத் தொட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!