
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க மறுத்த நடிகை: இயக்குனர் தகவல்
படம் பற்றி இயக்குனர் தனா கூறியதாவது: ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரம்தான் நினைவுக்கு வரும். நாட்டில் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு சர்வாதிகாரம்தான் நடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஹிட்லர் இருக்கிறார். இவற்றை எதிர்த்து போராடும் ஒரு சாதாரண மனிதனின் கதை இது. இந்த படத்தில் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் பெண்ணாக ரியா சுமன் நடித்துள்ளார். அவரது கேரக்டர் பெயர் சாரா. முதலில் சாரா கேரக்டரில் வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். பின்னர் அவர் நடிக்க மறுத்து வெளியேறினார். தனது சொந்த காரணங்களுக்காக அவர் வெளியேறினார். அவர் யார் என்பதையும், என்ன காரணம் என்பதையும் சொல்வது நாகரீகமல்ல. அதன்பிறகு தான் ரியா சுமனை அணுகி கேட்டோம். அவர் உடனே ஒப்புக் கொண்டு இரண்டு நாளிலேயே படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார். நன்றாக நடித்தும் கொடுத்தார். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!