
காதலுக்குள்ளும் நுழையும் அரசியல்: புதிய படம் குறித்து இயக்குனர் தமிழ் தகவல்
படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறும்போது, “லவ் பேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது. ஒரே கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!