
இந்தியன் 2 - ஓடிடி உரிமை இவ்வளவு விலையா?
கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2", அஜித் நடிக்கும் "விடாமுயற்சி", விக்ரம் நடிக்கும் "தங்கலான்", சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படம், விஜய் சேதுபதி நடிக்கும் "மகாராஜா", ஆர்ஜே பாலாஜி நடிக்கும் "சொர்க்கவாசல்", கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "ரிவால்வர் ரீட்டா" மற்றும் "கன்னி வெடி", ஆகிய படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இப்படங்கள் அனைத்தும் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. தியேட்டர்களில் வெளியான பின்பு இவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும்.
மேலே குறிப்பிட்ட படங்களின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமைகள் வாங்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்களின் ஹிந்தி உரிமைகளையும் சேர்த்து வாங்கியுள்ளனர்.
"இந்தியன் 2" படத்தின் உரிமை 200 கோடிக்கும், "விடாமுயற்சி" படத்தின் உரிமை 125 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!