
விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த் - பிரபுதேவாவின் கேரக்டர் என்ன?
ஜன 17, 2024
Advertisement
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் கோட் படத்தில் மாஜி ஹீரோக்களான மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் மோகன் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அவர்தான் பிரதான வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. ஆனால் பிரசாந்த், பிரபுதேவாவின் கேரக்டர்கள் சஸ்பென்சாக இருந்து வந்தது. பொங்கலை முன்னிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அதில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோரின் போட்டோக்கள் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அப்பா வேடத்தில் நடித்துள்ள விஜய்யின் உயிர் நண்பர்களாக நடித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. நண்பர்கள் என்றாலும் ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகளிலும் விஜய்யுடன் அவர்கள் இணைந்து நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!