
சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா : 10 நாட்கள் நடக்கிறது
இந்த விழாவில் ஐரோப்பிய பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் திரையிடப்படுகிறது. இதில் 18 பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். புகழ்பெற்ற இயக்குனர் ஆலிஸ்டியோப் இயக்கிய "கிராண்ட் பிரிக்ஸ்" விருது வென்ற பிரெஞ்சுத் திரைப்படமான “செயின்ட் ஓமர்” படத்துடன் திரைப்பட விழா தொடங்குகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான பிரான்ஸ் துணை தூதர் டாக்டர் பாட்ரிசியா தெரிஹார்ட் துவக்கி வைக்கிறார். அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!