
பெயரில் மாற்றம் செய்த பிரபாஸ் ?
"கல்கி 2898 ஏடி" மற்றும் மாருதி இயக்கத்தில் ஒரு படம் என அவர் நடிக்கும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொங்கலை முன்னிட்டு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. படத்திற்கு "ராஜா சாப்" எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
போஸ்டரில் பிரபாஸ் பெயர் ஆங்கிலத்தில் "Prabhass" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை "Prabhas" என்று இருந்ததில் கூடுதலாக ஒரு "s" சேர்த்திருக்கிறார். எதற்காக இந்த மாற்றம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள். நியூமராலஜிபடி அவர் மாற்றியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே சமயம் "பாகுபலி 2" போன்றதொரு வெற்றியைப் பெற பெயரில் இப்படி மாற்றம் செய்திருக்கலாம் என்றும் கூட நினைக்க வாய்ப்புள்ளது.
பிரபாஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இப்படி எதுவும் மாற்றப்படவில்லை. ஒருவேளை தவறுதலாக ஒரு "s" ஐ சேர்த்திருக்கவும் வாய்ப்புள்ளது. ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் ஒரு டவுட்டு வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!