கார்த்தியை தொடர்ந்து சூர்யா படத்தில் இணையும் அதிதி ஷங்கர்
Advertisement
Advertisement
கார்த்தியை தொடர்ந்து சூர்யா படத்தில் இணையும் அதிதி ஷங்கர்
ஜன 11, 2024
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குனர் ஷங்கரின் மகள் மற்றும் நடிகை அதிதி ஷங்கர், தமிழில் கதாநாயகியாக கார்த்தி நடித்த "விருமன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து மாவீரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 43வது படத்தில் அதிதி ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!