
ஜெயம் ரவியின் சைரன் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா?
இந்த நிலையில், தற்போது சைரன் படத்தை வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று "ஜி5" ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இதற்கு முன்பு ஜெயம்ரவி நடித்த 25வது படமான "பூமி" படத்தையும் ஓடிடி தளத்தில்தான் நேரடியாக வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சைரன் படத்தை அடுத்து தக்லைப், காதலிக்க நேரமில்லை, பிரதர், தனி ஒருவன்- 2 என பல படங்களில் ஜெயம் ரவி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!