
ராமர் கோவிலுக்கு ஹனுமானின் கைங்கர்யம்
படத்தின் கதைப்படி ராமரின் தீவிர பக்தரான ஹனுமனின் சக்தி பெற்ற ஒரு இளைஞன் மக்களுக்காக போராடுவதுதான் கதை. ஹனுமன் தொடர்புடைய இந்த படத்தின் மூலம் அயோத்தியில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடக்கும் நேரத்தில் ராமர் கோவிலுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய முன் வந்திருக்கிறது படக்குழு. அதன்படி இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.
"ஹனு மான்" படக் குழுவினருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் ஆன்மிக அன்பர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!