
கேப்டன் மில்லருக்கு 14 இடத்தில் வெட்டு
இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு "யூஏ" சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் தணிக்கை குழுவினர் செய்த மாற்றங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தில் வரும் பல வசனங்களை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளது. படத்தில் மொத்தம் 14 இடங்களில் கட் கொடுத்துள்ளது. படத்தில் மொத்தமாக 4 நிமிடங்கள் 36 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சி நேரம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக சுருங்கியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!