சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகும் விடுதலை 2
ஜன 09, 2024
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விடுதலை" படம் இரண்டு பாகமாக தயராகி இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் நடித்திருந்தனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்திருந்தார். வரும் கோடை விடுமுறையில் "விடுதலை-பார்ட் 2" படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டாலும் கோடை விடுமுறையில் வெளியிட்டு வசூலை பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக வருகிற பிப்ரவரி 3ம் தேதி ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதேபோல வருகிற 31ம் தேதி முதல் பாகம் திரையிடப்படுகிறது. இரு பாகங்களும் "லைம்லைட்" பிரிவின் கீழ் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் வெற்றிமாறன், எல்ரெட் குமார், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!