
ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கிறாரா ரஜினி?
இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை நெல்சன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை பொருத்தவரை பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதும், அப்படங்களின் இரண்டாம் பாக கதைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அவர் ஒத்துக் கொள்வாரா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!