
‛ராசாவே உன்ன காணாத நெஞ்சு..: விஜயகாந்த் பற்றி மனமுருகி பாடிய தனுஷ்
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜன.,3) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் தனுஷ் மேடையில் பேச வரும்போது, கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‛ராசாவே உன்ன காணாத நெஞ்சு" பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார். அந்த பாடலை தனுஷ் உடன் சேர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களும் பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் தனுஷ், விஜயகாந்த் மறைவின் போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றிருந்தார். இதன்காரணமாக விஜயகாந்தின் உடலுக்கு அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இந்த நிலையில், அவரது மறைவுக்கு பின் தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் தனுஷ் செய்த இந்த செயல் காண்போரை நெகிழச் செய்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!