
அம்மா ஆகிறார் அமலா பால்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுளார். தனது வயிற்றில் குழந்தை வளர்வதை காட்டுவது போன்றும், காதலனுக்குள் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கும் படம் ஒன்றையும் வெளியிட்டு "ஒன் பிளஸ் ஒன் =த்ரி" என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!