
கான்ஜுரிங் கண்ணப்பன் - 2023ம் ஆண்டின் கடைசி 25 நாள் படம்
இப்போதெல்லாம் ஒரு படத்தின் வசூல் மட்டுமே அதிகம் பார்க்கப்படுகிறது. அந்தப் படங்கள் எத்தனை நாட்கள் ஓடியது என்பது குறித்தெல்லாம் யாரும் அதிகம் கவனிப்பதில்லை. கடந்த 2023ம் ஆண்டின் கடைசி 25வது நாள் படமாக "கான்ஜுரிங் கண்ணப்பன்" படம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி வெளியான இப்படம் நேற்றுடன் 25 நாளைக் கடந்துள்ளது. சதீஷ் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வசூலைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த படம்.
காமெடியிலிருந்து கதாநாயகர்களாக மாறிய நடிகர்களான சந்தானம், சூரி, யோகி பாபு, சதீஷ் ஆகியோரது படங்கள் கடந்த ஆண்டில் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!