
சிறிய படங்களுடன் ஆரம்பமாகும் 2024 வெளியீடுகள்
இந்த ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமை ஜனவரி 5ம் தேதி வருகிறது. அன்றைய தினம் சில சிறிய படங்கள் வெளியாக உள்ளன. “அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீ தாண்டி,” ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கடுத்த வாரம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி "அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1" ஆகிய படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட "லால் சலாம், அரண்மனை 4" படங்களின் வெளியீடு குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!