
பீட்சா 4ல் ஹீரோவாக நடிக்கும் நாசர் மகன்
இந்த நிலையில் "பீட்சா 4"ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார். இந்த பாகத்தை சூது கவ்வும் 2ம் பாக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதி, இயக்குகிறார். இதில் ஹீரோவாக நாசரின் மகன் அபி ஹாசன் நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கடாரம் கொண்டான், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்தவர். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெறவுள்ளது .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!