
தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமானா ? இயக்குனர் விளக்கம்
விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தவசி படத்தை இயக்குனர் உதயசங்கர் என்பவர் இயக்கி இருந்தார். அந்த படத்தின் டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் என உதயசங்களின் பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் சீமான் வேண்டும் என்றே பெருமைக்காக பொய் சொல்கிறார் என சோசியல் மீடியாவில் கிண்டலடித்து குற்றம் சாட்ட துவங்கினர். ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று படத்தின் இயக்குனர் உதயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் உதயசங்கர், “தவசி படத்திற்கு முழு வசனங்களையும் எழுதியது சீமான் தான். படப்பிடிப்பில் சின்னச்சின்ன மாற்றங்களை மட்டுமே நான் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே இரண்டு மூன்று தோல்வி படங்களை வரிசையாக கொடுத்திருந்த அவர் அடுத்த படம் இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார். தவசி படத்தில் வசனகர்த்தா என தனது பெயரை போட்டால் பலரும் தன்னை வசனம் எழுத மட்டுமே அழைக்க ஆரம்பித்தால், அடுத்ததாக தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காதோ என பயந்து வசனகர்த்தா என தனது பெயரை போட வேண்டாம் என கூறிவிட்டார். அதனால் தான் டைட்டில் கார்டில் முதலில் சீமானுக்கு நன்றி தெரிவித்து இருந்தோம்” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!