
கசிந்தது வேட்டையன் பட காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி
திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கன்னியாகுமரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சென்ற ரஜினிகாந்த், விஜயகாந்த் மரணத்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், பகத் பாசிலுடன் நடிக்கும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்காட்சிகள் வெளியாகாமல் இருக்க செல்போனுக்கு தடை விதித்துள்ளனர். வெளியாட்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பையும் மீறி கன்னியாகுமரியில் ரஜினிகாந்த், பகத் பாசில் ஆகியோர் பங்கேற்று நடித்த காட்சி இணைய தளத்தில் கசிந்துள்ளது. படக்காட்சியை கசிய விட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!