
ரஜினியுடன் ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் : சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 171-வது படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எனது ரோல் மாடல். சிறு வயதிலிருந்தே அவரது நடிப்பை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். அதனால் அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவருடன் ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்று சொன்னாலும் மறுக்காமல் நடிப்பேன். என்றாலும், இதுவரை ரஜினி 171-வது படத்தில் நடிப்பதற்கு எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!