
ஆஸ்கர் பட நடிகர் மர்ம மரணம்: காருக்குள் பிணமாக கிடந்தார்
48 வயதான லீ சன் கியூன் போதை பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் மர்மமான முறையில் காருக்குள் இறந்து கிடந்துள்ளார். லீ சன் கியூன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடக்கிறது. கொரியன் சினிமாவின் முக்கியமான குணசித்ர நடிகரான லீ சன் கியூனின் மரணம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!