
‛கேப்டன் மில்லர் படத்தின் ரன்னிங் டைம் வெளியானது
டிச 26, 2023
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் கேப்டன் மில்லர் படம் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுவரும் நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!