
பொங்கல் போட்டி - நான்கில் இரண்டு விலகி புதிதாகச் சேர்ந்த ஒன்று
"அயலான், கேப்டன் மில்லர்" ஆகிய இரண்டு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அவற்றின் வெளியீட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது என்பது ரசிகர்களுக்கும் தெரியும்.
"அரண்மனை 4" படத்தின் எந்த ஒரு சத்தத்தையும் காணோம். "லால் சலாம்" வெளியீட்டிலிருந்து பின் வாங்குகிறது என்பதை "மிஷன் சாப்டர் 1 அச்சம்" படத்தின் பொங்கல் வெளியீடு மூலம் புரிந்து கொள்ளலாம். இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது.
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் "லால் சலாம்" படம் பொங்கல் போட்டியிலிருந்து தள்ளிப் போவது உறுதி செய்யப்பட்டால் அவரது ரசிகர்களுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!