
58 வயதில் 3வது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை
படிப்பின் மீது ஆர்வம் கொண்ட முத்துக்காளை, கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது இவரது மூன்றாவது பட்டமாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போது “சொந்த ஊர் ராஜபாளையம், சின்ன வயதில் எனக்கு படிப்பை விட காராத்தேவில்தான் ஆர்வம். 18 வயதில் பிளாக் பெல்ட் வாங்கினேன். அப்படியே சினிமா ஆசையில் சென்னை வந்து, சண்டை கலைஞராக பணியாற்றி, சண்டை இயக்குனராகி அப்படியே நடிகராகிவிட்டேன். ஆனால் என் பெற்றோர்களுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் படிக்கத் தொடங்கினேன். இப்போது 3 பட்டங்களை பெற்றிருக்கிறேன். அடுத்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!