
தனுஷ் படம் சர்வதேச தரத்தில் இருக்கும் : எஸ்.ஜே சூர்யா
இந்த நிலையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதற்கு பெயரிட்டுள்ளனர்.
தனுஷின் இயக்கம் பற்றி நடிகர் எஸ்.ஜே..சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “அவரு சூப்பர் டைரக்டரும் கூட... தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன வெறி ! என்ன அர்ப்பணிப்பு ! அவர் வேற லெவல். தனுஷ் 50வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அவரது "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!