
இறுதி கட்டத்தில் கள்வன்: ஹங்கேரியில் பின்னணி இசை கோர்ப்பு
தற்போது ரேவா, ஹங்கேரி நாட்டில் தங்கி இருந்து பின்னணி இசை கோர்ப்பு பணிகளை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. "கள்வன்" படத்திற்கு பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது. இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான வரவேற்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!