ஜெய்பீம் லொகேஷனில் துவங்கும் சூர்யா 43 படப்பிடிப்பு
Advertisement
Advertisement
ஜெய்பீம் லொகேஷனில் துவங்கும் சூர்யா 43 படப்பிடிப்பு
டிச 21, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சிவா இயக்கி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார். சூர்யாவின் 43வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு அதே கல்லூரியில் தான் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷிற்கு இது நூறாவது படமாகும்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!