
2024 பொங்கல் வெளியீட்டில் மாற்றங்கள் வருமா ?
"அயலான்" படத்திற்கான வியாபாரம் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக நடந்துள்ளதாகத் தகவல். "கேப்டன் மில்லர், லால் சலாம்" ஆகியவற்றின் வியாபாரம் இன்னமும் நடந்து வருகிறதாம். "அரண்மனை 4" படம் பொங்கல் போட்டியிலிருந்து நிச்சயம் விலகும் என்கிறார்கள். அதோடு சேர்ந்து "கேப்டன் மில்லர்" அல்லது "லால் சலாம்" ஆகிய படங்களில் ஏதாவது ஒன்று விலகுமா அல்லது போட்டி போடுமா என்பது அடுத்த வாரத்தில் தெரிய வாய்ப்புள்ளது.
2024ல் பல பெரிய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால் அடுத்த வருட வெளியீட்டை தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் எழுந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!